போலிகள்
இதயம் துளைத்தப் போலி உறவுகளால்
இதயம் தொலைத்த எனக்கு
இதய நோய் என்கிறார் .
இதய நோய் மருத்துவர்.
இல்லாத இதயத்துக்கு
நோய் என்று
பொய்யாகக் கூறும் - இவர்
போலி மருத்துவரோ!!!
நன்றி
கனிமொழி இதழ்
கே.பாலசுந்தரி எம்.எ
மாங்குடி
சுனாமி
எங்கள் கழிவுகளை உன்னில்
கலக்கவிட்டதால் எங்களையே
கழிவுகளாய் உன்னில் மிதக்க விட்டாயோ?
கே.பாலசுந்தரி,மாங்குடி
வேடந்தாங்கல்
இனப்பெருக்கம் காண
ஏற்ற இடம் இதுவென
அயல் நாட்டுப் பறவைகள்
அத்தனையும் இங்கு வந்தாலும்
தன் குணம் மொழி மாறாமல்
தங்கி இருக்குது வேடந்தாங்கலில்
பணப் பெருக்கம் காணப்
பன்னாடு சென்ற மானுடப்
பறவைகள் மட்டும்
வேற்றுமொழி வெற்று ஆடம்பரம்
வேற்றுக் கலாச்சாரம் எனப் பொய்
வேட(ம் )ந்தாங்கல் ஏன் ?
நன்றி
கனிமொழி இதழ்
பாலசுந்தரி எம்.எ
எனக்குள் துளிர்த்தத் துளிப்பாக்கள்
(மாங்குடி பாலா)
முதியோர்
முன்னாள் நினைவுகள்
முள்ளாய் குத்தும் நினைவுள்
முதியோரின் மலரும் நினைவுகள்
பிரிவு
பழைய உறவு
பழசாய் ஆனதால்
புதிய உறவின் வரவு!
சரிவு
சரிவுகள் சறுக்கி விழ அல்ல
சடுதியில் மீண்டும்
சாதிக்க!
மறுபக்கம்
தாய்மார்களின் தினம்
தலைமை ஏற்பு
தாயைத் தள்ளி வைத்தவர்!
மருமகள்
மருமகளை மாமியார்
மறுமகளாய் நினைக்கணும்!
மருமகள் மாமியாரை
மாற்றாந்தாயாய் நினைக்கணும்!
மருமகன்
மாமனார்
மறுமகனாய் நினைக்கணும்!
சொத்தில் பங்கு கொடுக்கணும்!
முதியோர் பென்ஷன்
ஊழியம் செய்யாமலே
வாங்கும்
ஓய்வு ஊதியம்!
மரபியல்
மரபியல்கள் மாறாதது என்பதை
மறையிலக்கணமாய் தந்த
மகவுகள்!
மானுடயியல்
உனக்குப் பிடித்ததை
மற்றவர்க்கு செய்
உனக்குப் பிடிக்காததை
உன் எதிரிக்கும் செய்யாதே!
உதவி!
கேட்டது கொடுக்காதே!
கேட்காமலே கொடுத்துவிடு!
பரிணாமம்
தான் பெற்றோராய் ஆனதும்
தன்னைப் பெற்றவரை
உதறித் தள்ளும்
பெற்றெடுத்தப் பிள்ளைகள்!
பரிவு
உறவுகள் மீது மட்டுல்ல
மற்ற
உயிர்களிடமும்!
மழை
விண்ணிலிருந்து
மண்ணுக்குள் இறங்கும்
விழுதுகள்!
காலைச் சூரியன்
வைகறைப் பெண்ணின்
நாணிச் சிவந்த
கன்னம்!
மாலைச் சூரியன்
மாலைப் பெண்ணுக்கு
மஞ்சள் நீராட்டு விழா!
தூறல்
பூக்களுக்குப்
பூப்பு நீராட்டல்
நட்சத்திரங்கள்
வானவீதியில்
வைரக் கண்காட்சி
வைத்தது யார்?
மேகங்கள்
வானத் திரையில்
வண்ணமிகு கிராபிக்ஸ்
வடிவமைத்து யார்?
மனைவி
உண்மைகளை கண்டு பிடிக்கும்
உன்னத கருவி!
ஈவ்டீசிங்
நிலவுப் பெண்ணைக்
கண்ணடிக்கும்
நட்சத்திரக் காளையர்!
காதல்
கண் வழி புகுந்து
இதயம் தாங்கும்
கதிர்வீச்சு!
இடி-மின்னல்-மழை
வானக் கணவன்
மின்னலாய்ப் பாய்ந்து
இடியாய் வசை பாட
மேக மனைவியின் கண்களில்
அருவி!
குடும்பம்
சிரிப்பே அறியாத அப்பா
சீரியலில் மூழ்கும் அம்மா
சீர்திருத்தப் பள்ளியில் பிள்ளை
அம்மா
தொலைந்து போன
தொப்புள் கொடி
தொடர்பு
ஞானகுரு
உன் பிள்ளை இல்லை
என் அப்பா என்று
உணர்த்தும் பேரக் குழந்தைகள்
அகதிகள்
சொந்த நாட்டிலேயே
அகதிகளாக சிறுபான்மை
இனத்தோர்
சொந்த வீட்டிலேயே
அகதிகளாகப் பெரும்பான்மை
முதியோர்
பெண் சிசு
தாய்ப்பால் தவிர்க்கப்பட்டு
கள்ளிப்பால் புகட்டப்படும்
பெண்பால்
மன்னிப்பு
கேட்கத் தயங்குவது
கொடுக்க
மறுப்பது!
மறதி
நம்மை
ஏற்றிவிட்ட
ஏணி
வாரிசு
மனசுக்குள் பட்டாம்பூச்சி
மருமகள்
உண்டாகி இருக்கிறாள்
பாவம்
பெற்றவர்களைப் பட்டினி
போட்டு
மற்றவர்கள்
மனம் குளிர
விருந்து வைப்பது
கணவன்
கணிக்க முடியாத
வானிலை
அறிக்கை
பூமராங்
நம்முடைய பிழைகள்
நம்மையேத் திருப்பித்
தாக்குவது
பக்குவம்
கடந்த வந்த பாதையைக்
காலம் கடந்து
திரும்பிப் பார்ப்பது
கனிவு
கன்னியரிடம் மட்டும்
காளையர் கட்டாயம்
காட்டுவது
நன்றி
தந்த உதவி மறந்திடு
பெற்ற உதவி
மதித்திடு
மாங்குடி
என்னை கடக்கும்
பேருந்துகளில் எல்லாம்
உன் முகம் தேடி
காலை முதல்
கால்கடுக்க நிற்கின்றேன் ,
பார்ப்பவர்கள் எல்லாம்
பைத்தியகாரன் என்று - நினைக்க
எத்தனை பேருந்துகள்
என்னை கடந்து சென்றன
என்பதை எண்ண
மறந்து விட்டேன் - அதை மட்டுமா
இன்று என்ன கிழமை
என்பதையும் பார்க்க
மறந்து விட்டேன்...
R.S.பாலமுருகன்.
Cell: 9841165384
பேருந்துகளில் எல்லாம்
உன் முகம் தேடி
காலை முதல்
கால்கடுக்க நிற்கின்றேன் ,
பார்ப்பவர்கள் எல்லாம்
பைத்தியகாரன் என்று - நினைக்க
எத்தனை பேருந்துகள்
என்னை கடந்து சென்றன
என்பதை எண்ண
மறந்து விட்டேன் - அதை மட்டுமா
இன்று என்ன கிழமை
என்பதையும் பார்க்க
மறந்து விட்டேன்...
R.S.பாலமுருகன்.
Cell: 9841165384