வரவேற்கிறோம்
அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே! வணக்கம் !!
இணையத்தளம் மூலம் உங்களுடன் இணைவதில் பெருமகிழ்வு கொள்கிறோம்.உலகெங்கும் பரவிக்கிடக்கும் தமிழ் நெஞ்சங்களுக்குள் ஒரு உறுத்தல்.அந்த உறுத்தலுக்கு ஒத்தடம் கொடுக்கும் முயற்சியே இந்த அழைப்பு.
திரைகடலோடி திரவியம் தேடும் தமிழன்பர்களும்,திரவியம் தேட மாற்றுமொழியில்பயின்றவர்க்கும், தன் அடையாளம் தொலைக்கிறோம் என்பதே அந்த உறுத்தல். பள்ளி நாட்களிலேயே பாடபுத்தகம் முழுவதும் படிக்க பயந்து ''நோட்ஸ்'' படித்துப் பரீட் சையை எதிர் கொண்டவர்கள் நாம்! அதனால் கல்வியில் ஆழ உழுவதைவிட அகல உழுவதையே நடைமுறை படுத்தினோம் ஆழ உழாமல் விதைத்த பயிர்கள் விளைச்சல் தருவதில்லை. அதுபோன்றே நமது நிலை. எனவே நமது பாரம்பரிய அடையாளங்களில் ஒரு தேக்க நிலை .
தாய்ப்பால் துறந்து புட்டிப்பால் புகட்டுவது போல நமது தாய் மொழி மறந்து மாற்று மொழியைச் சுவைக்கிறோம். புட்டிபால் உண்டவர்களுக்கும் சரிவிகித உணவு வழங்குவதே எங்கள் நோக்கம். உங்களுக்கு அந்த சரிவிகித உணவைத் தேடிக்கண்டு பிடிக்கும் சிரமம் இன்றி அத்தனையும் கலந்து தர இருக்கிறோம் தாய் மொழியிலேயே .நம்பிக்கையுடன் சுவைக்க வாருங்கள்.
நமது மொழி-கலாச்சாரம் -சம்பிரதாயம் -சமயம் -சமயகுரவர் பாடல்கள்' சமையல் -வைத்தியம் அனைத்தையும் தொகுத்து வழங்க இருக்கிறோம். நவமணிகளும் இந்த கருத்துப் பெட்டகத்தில் கொட்டிக்கிடக்கின்றன.அள்ள அள்ள குறையாத இந்த அட்சய பாத்திரத்தில் அள்ளிச்செல்லலாம் நம்பிக்கையுடன் வாருங்கள்.
நாம் ஒருங்கிணைய இணையத்தளம் மூலம் அடித்தளம் அமைக்க வாருங்கள் ,எங்களுடன் கை கோருங்கள் எங்கள் கன்னி முயற்சியைக் கன்னிதீவாக்க வாருங்கள்!
திருமுறைகளை பண்முறைகளோடு கற்றுபயனுற அன்புடன் அழைக்கிறோம் .